இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் ஷெல் தாக்குதல்

காஸா கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.02.2010) காஸாவுக்கு வடக்கேயுள்ள குடியிருப்புக்களை நோக்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஷெல் தாக்குதல் நடாத்தியதில் ஐந்து பலஸ்தீன் பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

மேற்படி தாக்குதலில் படுகாயமுற்றுள்ள நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார அமைச்சின் துரித வைத்தியசேவைப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் முஆவியா ஹஸனின் பலஸ்தீன் தகவல் மையத்திடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் ஆட்டிலரி ஷெல் தாக்குதலானது பெய்ட் லஹியாவிலுள்ள அபூ ஸம்ரா குடும்பத்தினரின் வீடுகளைக் குறிவைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் அணுசரனையுடன், ஆயுததாரிகளான யூத ஆக்கிரமிப்பாளர்கள் நப்லஸ் நகருக்குத் தெற்கேயுள்ள ஈராக் பூரின் கிராமத்தினுள் அத்துமீறி நுழைந்து கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பலஸ்தீன் பொதுமக்கள்மீது யூத ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கொண்ட இத்தாக்குதலில் மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

யூத ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பக்கபலமாக கிராமத்தினுள் நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் பலஸ்தீன் வீடுகள் பலவற்றை உடைத்து, வீட்டு உரிமையாளர்களிடம் சில பத்திரங்களைக் கொடுத்து கையொப்பமிடுமாறு நிர்ப்பந்தித்தனர் என்றும், அப் பத்திரங்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெரியாத நிலையிலும் அவற்றில் கையெழுத்திடுமாறு அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர் என்றும் உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நன்றி: PIC

அமைதிப் பேரணியினரை நோக்கித் தாக்குதல் நடாத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை

ரமல்லா இஸ்ரேலிய பிரிவினைச் சுவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக மேற்குக் கரையிலுள்ள பிளின், மஆஸரா, பெய்ட் உம்மார் கிராமங்களில் இடம்பெற்ற அமைதிப்பேரணிகளை இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர், ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தியும் நச்சுப்புகைக் குண்டுகளை எறிந்தும் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து, வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் தாக்குதலின்போது பிளின் கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்களில் பலரும், இரண்டு இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டாளர்கள் பலரும் படுகாயமடைந்தனர் என்றும், ஏனையோர் நச்சுப்புகைக் குண்டுத் தாக்குதலால் சுவாசிக்கமுடியாமல் அவதியுற்றனர் என்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பலஸ்தீன் நிலத்தில் பெரும்பகுதியை வளைத்து எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரிவினைச் சுவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமைந்த வாராந்த அமைதிப் பேரணி, ஐந்தாவது வருடமாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அல் ஹலீல் நகருக்கு வடக்கே அமைந்துள்ள பெய்ட் உம்மார் கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் பேரணியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் இடைமறித்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். 

ஆயுததாரிகளான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினருடன் இணைந்துகொண்டு பேரணியில் பங்குகொண்டவர்கள்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாகவும், பேரணியினர் கற்களால் திருப்பித் தாக்கியதாகவும், இன்னும் சிலர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

பெத்லஹேம் மாவட்டத்திலுள்ள மஆஸரா கிராமத்தில் இடம்பெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களில் அனேகர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் அத்துமீறிய கடும் தாக்குதல்களால் படுகாயமுற்றதோடு, மேலும் பலர் நச்சுவாயுத் தாக்குதலால் சுவாசிக்க முடியாமல் அவதியுற்றனர்.

மேற்படி அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களும் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நன்றி: PIC

ரமல்லா – சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான அஹ்ரார் அமைப்பு, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் இஸாம் அல் அஷ்கரை உடனடியாக விடுவிக்கக்கோரி இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச ஸ்தாபனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை (19.02.2010) அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் ஹஃப்ஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் பௌதீகவியல் பேராசிரியர் அஷ்கர், தொடர்ச்சியான உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு என்பவற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டுக்குச் சேவையாற்றி அதனைக் கட்டியெழுப்பும்  பணியில் ஈடுபட விடாமல் பலஸ்தீன் விஞ்ஞானிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை தடுத்துவைத்துள்ளது என ஹஃப்ஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை காலமும் எத்தகைய குற்றச்சாட்டும் சுமத்தப்படாத நிலையில் எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அஷ்கரின் தடுப்புக்காவலை தொடர்ந்தும் நீடிக்குமுகமாக இஸ்ரேலிய வழக்குமன்றத் தலைவரை (நீதிபதி?!!) மருத்துவமனைக் கட்டிலுக்கே அழைத்துவந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையின் மனிதாபிமானமற்ற கொடுஞ்செயலை அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்.

பேராசிரியர் அஷ்கரை மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வழக்குமன்றத் தலைவர் (நீதிபதி?!!), ‘இங்கு பெறப்பட்டுள்ள பல்வேறு மருத்துவச் சான்றிதழ்களின் மூலம் உங்கள் தற்போதைய உடல்நிலை குறித்தும், பல்வேறுபட்ட நோய்கள் மற்றும் உடல் உபாதைகளால் நீங்கள் துன்புற்றுவருவது குறித்தும் நான் நன்கறிவேன். என்றாலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யுமுகமாக உங்களை நான் சிறையிலடைத்துத்தான் ஆகவேண்டும்’ என்று தெரிவித்திருப்பதாக ஃபுவாத் அல் ஹஃபஃஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி: PIC

இஸ்மாயீல் ரத்வான்

காஸா – கடந்த வியாழக்கிழமை (18.02.2010) துபாயில் இடம்பெற்ற மஹ்மூத் அல் மஅபூஹ் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேலிய மொசாத் இருக்கின்றது என்பதைத் தமது இயக்கம் ஆரம்பத்திலேயே சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்துவைத்திருந்தது என ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயீல் ரத்வான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், துபாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடயங்களின்படியும், மஅபூஹின் படுகொலைச் சம்பவத்தில் இஸ்ரேலிய மொசாத்துக்குத் தொடர்புள்ளதாக தற்போது வெளியாகியுள்ள புதிய தடயத்தினாலும் இஸ்ரேலிய சதி அம்பலமாகியுள்ளது; இந்நிலையில், பிரிட்டன், ஃபிரான்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலியக் கொலையாளிகள் போலியான ஐரோப்பிய கடவைச்சீட்டுகளைப் பயன்படுத்தியுள்ளமை குறித்து விசாரிப்பதற்காக தத்தமது நாடுகளிலுள்ள இஸ்ரேலியத் தூதுவர்களை ஆஜராகுமாறு அழைப்புவிடுத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது எந்தெந்த நாடுகளின் பெயரில் போலிக் கடவைச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டனவோ, அந்தந்த நாடுகள் இஸ்ரேலை ஒரு பயங்கரவாத நாடு என்று பகிரங்கமாக அறிவித்து, இஸ்ரேலியப் போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சிப்பதே இஸ்ரேலுக்குக் கொடுக்கும் சரியான தண்டனையாக அமையும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மிக நீண்ட காலமாக பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் செய்துவரும் அராஜகங்களின் நெடிய பட்டியலில் தற்போது மஅபூஹின் படுகொலையும் சேர்ந்துள்ளது என்று ரத்வான் தமது உரையை நிறைவுசெய்தார்.

நன்றி: PIC

 

மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் துருக்கி

இஸ்தான்பூல் - முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமுகமாக இஸ்தான்பூல் துறைமுகத்திலிருந்து நிவாரண உதவிப் பொருட்கள் கொண்ட 20 கப்பல்கள் தயாராகி வருவதாகவும் அவை அடுத்த மாதம் தமது பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் துருக்கிய நிவாரண உதவி ஸ்தாபனமான ஐ.எச்.எச். தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பும் காஸாவுக்கு பல்வேறு நிவாரண உதவிக் குழுக்களை அனுப்பியுள்ள ஐ.எச்.எச். ஸ்தாபனம், இம்முறை அனுப்பவிருக்கும் நிவாரண உதவிகளில்  கட்டடப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பாரியளவு நிவாரணப் பொருட்கள் கப்பலேற்றப்பட இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய கப்பல்கள் அமெரிக்கா, கிரீஸ், ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, மலேசியா, வெனிசுலா ஆகிய நாடுகளிலிருந்து புறப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மேற்படி ஸ்தாபனம், காஸாவுக்கான நிவாரண உதவிக்குழுவில் பல்வேறு சர்வதேசப் பிரமுகர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இடம்பெறவுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

ஐ.எச்.எச். ஸ்தாபனத் தலைவர் புளென் யில்டிரிம் குறிப்பிடுகையில், தமது நிவாரண உதவிக் குழுவினர் காஸா துறைமுகத்தைச் சென்றடைவதை எந்தவொரு சட்ட நடவடிக்கை மூலமும் தடுத்துநிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையையும் எகிப்தின் கட்டுப்பாடுகளையும் முறியடிப்பதே தமது குழுவினரின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

நன்றி: PIC

 

அமெரிக்க காங்கிரஸ்

வொஷிங்டன் -  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ‘பவர் – 54′ எனும் பெயரில் காஸா சார்புநிலைக் கருத்துருவாக்க அமைப்பொன்றை நிறுவியுள்ளதாக ஹீப்ரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16.02.2010) ஹீப்ரு நாளிதழ் மஆரிவ் வெளியிட்டுள்ள செய்தியில், மேற்படி 54 காங்கிரஸ் உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், முழுமொத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு (435) ஒப்பிடுகையில் இவர்களின் எண்ணிக்கை (54) மிகச் சிறிதாக உள்ளநிலையிலும் இஸ்ரேலிய சார்புநிலைக் கருத்துருவாக்கத்துக்குப் பெரும் தலையிடியாக மாறியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 

மேற்படி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு விடுத்துள்ள செய்தியில் காஸா மீதான முற்றுகையை தளர்த்துமுகமாக இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளனர் என்றும் ஹீப்ரு நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

சர்வதேச அல் குத்ஸ் அமைப்பின் காஸா பிராந்தியத் தலைவர் கலாநிதி அஹ்மத் அபூ ஹலாபியா

காஸா  – கடந்த இரு வாரகாலமாக இஸ்ரேலியத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடந்த செவ்வாய்க்கிழமை (16.02.2010) சர்வதேச அல் குத்ஸ் அமைப்பின் காஸா பிராந்தியத் தலைவர் கலாநிதி அஹ்மத் அபூ ஹலாபியா கூறியுள்ளார்.

கலாநிதி அபூ ஹலாபியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரத் தரப்பு அண்மைக்காலமாக ஏராளமான பலஸ்தீன் வீடுகள், கடைகள், கட்டடங்களைத் தகர்ப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும், புனித ஜெரூசல நகரின் சுற்றுப்பிரதேசம் எங்கிலும் குறிப்பாக, ஷுஆஃபத் அகதி முகாமில் தொடர்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.   

இஸ்ரேலியப் படையினரால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர்; இஸ்ரேலால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலக்கீழ் அகழ்வு நடவடிக்கைகளால் அல் அக்ஸா மஸ்ஜித் மற்றும் அல் மர்வானி மஸ்ஜித் சுவர்களில் வெடிப்புகள் தோன்றியுள்ளன; ஜெரூசலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அடிக்கடி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதன் மூலம் புனித அல் அக்ஸா மஸ்ஜிதைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் திட்டமிட்ட முறையில் தடுக்கப்படுகின்றனர் என்று இஸ்ரேலிய அதிகாரத் தரப்பின் அராஜகங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

அபூ ஹலாபியா தொடர்ந்து கருத்துரைக்கையில், அல் அக்ஸா மஸ்ஜித் புனர்நிர்மாணப் பணிகளுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, முழு ஜெரூசல நகரையும் கட்டட நிர்மாணங்களுக்கான பிராந்தியமாகக் கருதப்பட்டு, அங்கு கட்டடங்களை நிர்மாணிக்க யூதர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்ற இஸ்ரேலியத் திட்டமொன்று அமுலுக்கு வரவிருப்பது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

 

எல்லைக் கடவைகள் தொடர்பான பலஸ்தீன் அதிகாரசபைத் தலைவர் கலாநிதி ஃகாஸி ஹமாத்

காஸா கடந்த செவ்வாய்க்கிழமை (16.02.2010) காஸாவின் எல்லைகளை மூடியிருப்பதானது காஸா மக்களின் இன்னல்களை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது என எல்லைக் கடவைகள் தொடர்பான பலஸ்தீன் அதிகாரசபைத் தலைவர் கலாநிதி ஃகாஸி ஹமாத் தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்துரைத்த அவர், அரசியலைத் தொடர்புபடுத்தாமல் ஒரு மனிதாபிமானச் செயற்பாடு என்ற அடிப்படையில் காஸாவுக்குள் போக்குவரத்தை அனுமதிப்பது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க முன்வருவது இன்றியமையாததாகும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஸாவுக்குள் பிரவேசிப்பது தொடர்பில் தற்போது நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலைமையானது காஸா மக்களின் முழுமொத்த வாழ்வையுமே பாதிப்பதாக அமைந்துள்ளது; குறிப்பாக, நோயாளிகள், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் விஸா வைத்திருப்பவர்கள், மாணவர்கள் ஆகியோரை மிகவும் பாதிப்பதாக இருக்கின்றது  என்று அவர் வலியுறுத்தினார்.

காஸா எல்லைக் கடவை தொடர்பான பிரச்சினை குறித்து உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றுடன் மட்டுமின்றி எகிப்தியத் தரப்புடனும் தாம் தொடர்புகொண்டு பேசிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

 

 

 


ஆயுதபாணிகளான யூத ஆக்கிரமிப்பாளர்கள்

அல் ஹலீல் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் பக்கபலத்துடன் அல் ஹலீல் நகரின் கிழக்கே அமைந்துள்ள அல் பகா கிராமத்தில் உள்ள பலஸ்தீன் விளைநிலங்களுக்குள் ஆயுதபாணிகளாகப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த திராட்சைக் கொடிகளைப் பிடுங்கியெறிந்து, பெரும் அட்டகாசங்களைப் புரிந்துள்ளனர் என உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கிர்யத் அர்பா எனும் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களில் ஒருபெரும் குழு சுமார் நான்கு தூனம் பரப்புள்ள பலஸ்தீன் விளைநிலத்தினுள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்கும் அதிகமான திராட்சைக் கொடிகளை வேரோடு பிடுங்கியெறிந்துள்ளனர் என்பது அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசம் கிர்யத் அர்பா, கர்ஸினா யூதக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உட்பட்டுவருகின்றது. எப்படியாவது இங்கு வாழ்ந்துவரும் பலஸ்தீனர்களை விரட்டிவிட்டு அப்பிரதேசத்தைக் கைப்பற்றித் தமது குடியிருப்போடு இணைத்துக்கொள்வதே இந்த ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாகும்.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (08.02.2010) அதிகாலை அல் ஹலீல், பெத்லஹேம், கல்கிலியா ஆகிய பிரதேசங்களில் திடீர் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரில் 10 பலஸ்தீனர்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துள்ளது.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின்கீழ் அல்லலுறும் பலஸ்தீன் மக்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த சனிக்கிழமை (06.02.2010) ஐ.நா.வின் மனிதாபிமானச் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீன் மக்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு எத்தகைய நியாயமான காரணங்களுமின்றி அவர்களின் வீடுகளைத் தகர்த்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 16 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர் என்றும், 2010 ஆம் வருட ஆரம்பமுதல் இத்தகைய தனிநபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சட்டபூர்வமான கட்டட நிர்மாண அனுமதியற்ற எத்தனையோ சட்டவிரோதக் கட்டடங்களை விடுத்து, பலஸ்தீனர்களின் 20 வீடுகள், பிற கட்டடங்களை வேண்டுமென்றே இடித்துத் தகர்த்துள்ளது என்றும் அவற்றுள் மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் சேமிப்பகங்கள் என்பனவும் அடங்கும் என்றும் மேற்படி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன் பிரஜைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் ஷெய்க் ஜர்ராஹ் காலனியில் உள்ள வீட்டு உடைமையாளர்களான பலஸ்தீனர்களுடனான மோதல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதோடு, பலஸ்தீனரின் வீடொன்று யூதக் குடியேற்றவாசிகளால் முற்றுகையிடப்பட்டிருப்பதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அல் ஹலீல் நகரின் அல் பகா எனும் கிராமத்திலும் ரமல்லாவின் அபொட் கிராமத்திலும் அத்துமீறி நுழைந்துள்ள யூதக்குடியேற்றவாசிகள் அங்குள்ள பலஸ்தீன் விளைநிலங்களை நிர்மூலமாக்கியுள்ளதோடு, ஒலிவ் மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையிலே, காஸாவிலுள்ள ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை இயங்கச் செய்வதற்குத் தேவையான டீசல் விநியோகத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம், முற்றுகைக்குட்பட்டுள்ள காஸா பிரதேசத்தில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் இடர்ப்பாடுகள் நிலவுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கையின் படி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது மேற்கொண்ட அத்துமீறல் யுத்தத்தினால் காஸாவெங்கிலும் உள்ள மின் விநியோக இணைப்புகள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளதோடு, அவற்றைத் திருத்திப் புனரமைப்பதற்குத் தேவையான சாதனங்களை காஸாவுக்குள் கொண்டுவர இஸ்ரேல் இன்றுவரை தடைவிதித்துள்ளமையால் சுமார் 40,000 பலஸ்தீன் மக்கள் எத்தகைய மின்சார வசதியுமின்றி அல்லலுறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

பலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முஸ்தஃபா அல் பர்கோதி

அல் ஹலீல் நகரில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரைநிகழ்த்திய பலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முஸ்தஃபா அல் பர்கோதி அவர்கள் இது தொடர்பாகக் கருத்துரைக்கையில், பலஸ்தீனும் அதன் மக்களும் மிகப்பெரும் ஸியோனிஸ சதிக்கு முகங்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை திட்டமிட்ட அடிப்படையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மேற்குக் கரையில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை விஸ்தரித்து வருவதாகவும் விபரித்துள்ளார்.
நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

இஸ்தான்பூல் – கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.01.2010) துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான், 

துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான்

இஸ்ரேல், காஸாவின் கீழ்க்கட்டமைப்பு வசதிகளையெல்லாம் நிர்மூலமாக்கி, அதனை ஒரு பெரும் சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதையோ அப்பாவி மக்களை இரக்கமின்றிக் கொன்றுகுவித்து வருவதையோ துருக்கி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.

யூரோநிவ்ஸ் எனும் தொலைக்காட்சிக்கு அர்தூகான் அளித்த பேட்டியில், இஸ்ரேலும் உலகின் ஒரு பகுதியாகக் கருதப்படவேண்டும் என்று அந்த நாடு விரும்பினால், துருக்கியைப் போன்று மிகச் சிறந்த வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஏனைய நாடுகளுடனான தனது தொடர்புகளைப் பேணுவதில் அது மிகக் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு, தனது அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்துக் கட்டாயம் மறுபரிசீலனை செய்யவும் வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் தனது பிடிவாதமான போக்குகளின் விளைவாகத் துருக்கியுடனான  தொடர்பினை இழப்பது குறித்து ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது. குறிப்பாக, சர்வதேச ரீதியான ராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சர்வதேச நியமங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் அண்மையில் துருக்கியத் தூதுவருடன் நடந்துகொண்டது போன்ற செயற்பாடுகள் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளுக்கு ஏற்புடையதன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலை எதிர்த்து டாவோஸ் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்யும் அர்தூகான்

இதேநிலை தொடருமாக இருந்தால், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளின் போது பரஸ்பர நம்பகத்தன்மை அற்றுப் போவதோடு, இஸ்ரேலுடனான துருக்கியின் பல்வேறு உடன்படிக்கைகள் தொடர்பிலும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் அர்தூகான் சுட்டிக்காட்டினார்.

நன்றி: PIC  

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள்

"பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்"

கும்பலொன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரிலுள்ள 80 வயதுப் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் இரண்டாம் மாடியினுள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் புரிந்துள்ளது. அவ்வீட்டினுள் தினந்தோறும் இவ்வாறு அத்துமீறி நுழைவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் அனுமதியளித்ததைத் தொடர்ந்தே இந்த அத்துமீறல் நீடிக்கின்றது.  

கடந்த 25.01.2010 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பில்(!?), வீட்டுச் சொந்தக்காரியான வயோதிகப் பலஸ்தீன் பெண்மணி தனது வீட்டின் இரண்டாம் மாடியில் ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் நுழைவதைத் தடுத்தால், 20,000 ஷெக்கல்கள் (5, 426 அமெரிக்க டொலர்கள்) அபராதப் பணமும், ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கறிஞருக்கு 9, 000 ஷெக்கல்கள் (2, 441 அமெரிக்க டொலர்கள்) பணமும் செலுத்தவேண்டி வருவதோடு, அப்பெண்மணி சிறையிலும் அடைக்கப்படுவார் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

அவ்வீட்டினுள் காலை 8மணி முதல் இரவு 8மணி வரை ஆண் குடியேற்றவாசிகளையும், இரவு 8மணி முதல் காலை 8மணி வரை பெண் குடியேற்றவாசிகளையும் அத்துமீறி நுழைந்து தங்கியிருப்பதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் அனுமதியளித்துள்ளது.

"அராஜம் ஒன்றே நமது வழி"

இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (29.01.2010) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மாநகரசபைக் குழு இஸ்ஸாவிய்யா நகரில் பலஸ்தீனர்கள் புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதைத் தடுத்துநிறுத்தும் நோக்கில் அங்குள்ள 660 தூனம் பரப்புள்ள பலஸ்தீன் நிலப்பரப்பைச் சுற்றிவளைத்து தேசியப் பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘யெரூஷலேம்’ எனும் இஸ்ரேலிய வாரப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் பலஸ்தீன் நகரத்தை விஸ்தரிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு வரலாற்றுப் பிரசித்திபெற்ற தளங்களை அமைக்கின்றோம் என்ற பெயரில் காய்நகர்த்துவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறுவழியில்லை என்றும் அப்பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

Upone failure of Egyptian efforts to dismantle the Palestine Governement in Gaza, in the name of internal reconciliation, Egypt bigins to build a shame wall to stop movements of foods to Gaza through tunnels.

As a continuation of this Egypt continued further arrests of Gazans and the officials of Gaza government.

According to PIC , the Egyptian authorities detained the chief of police patrols in the city of Khan Younis Ibrahim Maarouf upon his return along with ill father from a medical treatment trip abroad.

A Palestinian security source said Saturday that the Egyptian authorities allowed on Thursday the father of Maarouf to enter the Gaza Strip through the Rafah border crossing and arrested his son who escorted him during his trip.

The source pointed out that the Egyptian authorities refused to give any reason for his arrest.

In another incident, the Egyptian security forces detonated at noon Saturday a tunnel located along the neighborhood of Barahma in Rafah city without any reported casualties.

The movement of goods that enter Gaza through the tunnels markedly declined because of the iron wall being built by Egypt along its borders with Gaza, the arrest campaign waged against merchants in the Egyptian Rafah area and the detonation of tunnels.

Source: PIC

 அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன்  ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட   UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது.  

மேற்படி தீர்மானத்துக்கு உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகப் பின்வரும் இணைப்பில் சொடுக்கி, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை எழுதியனுப்புங்கள். உங்கள் உள்ளூர் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களிடமும் இதுகுறித்து கனேடிய அரசுக்குத் தமது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு கோரிக்கைவிடுங்கள்.

பலஸ்தீன் அகதிகளுக்கு உடனடியாக உங்கள் உதவி தேவைப்படுகின்றது. விரையுங்கள்!

By Yaman

Responding to an unexpected question about US funding for Israeli human rights violations at a town hall in Tampa yesterday, President Obama made a remark reminiscent of the last eight years and its frequent Bushisms.

On top of his tortured remark however (“The Middle East is an issue that has plagued the region for centuries.”), President Obama reminded us that the so-called peace process has become incompatible with Palestinian human rights. According to Obama, Palestinians must renounce violence, but not Israel, even though Israel is the country with a navy, air force, army, nuclear weapons, and an active intelligence apparatus, and even though Palestinians are the ones with an internationally recognized right to use violence against their occupier.

Joseph Massad’s analysis of this trend back to the Oslo Agreements could not have come at a more opportune time, given the way that Obama did not address Palestinian rights but instead responded to an un-asked question about the fantasy peace process, vividly demonstrating the dichotomy that has come to represent a new form of racism against the Palestinians.

It is thanks to this logic that Israel can charge that the Goldstone report, extensively documenting human rights violations, will cause “harm” to the peace process. Under the same pretext, the British government tries to prevent arrest warrants against accused Israeli leaders, because “Israel’s leaders need to be able to come to the UK for talks.” As if a peace process actually exists!

We cannot accept the notion that addressing the injustices against the Palestinians is an obstacle to this “elusive” peace, because it is precisely those injustices that stand in the way. Increasingly, the two-state solution espoused in words only by Israel, the State Department, and PLO Chairman Mahmoud Abbas looks like nothing more than another phase in perpetuating those injustices against most Palestinians, even if it helps create an elite VIP political class that can travel freely and make money under occupation.

To that extent the idea that every discussion about Palestinians must be centered on the chimera of “peace” aka Israel’s conception of the two state solution actually stands in the way of restoring to Palestinians their rights.

That the President can respond so audaciously and dishonestly with a recycled script practically written by the Israel lobby should dispel all fantasies that change on this issue will come from the top, or that they should even be aimed at the top. The Israel lobby will exist as long as Israeli apartheid does, so we cannot act as if the two issues are separate. All these claims only emphasize the need for more agitation and substantive organization at the grassroots level.

There are those who will act as apologists for the President, pointing to the Israel lobby, or to the fact that Florida is a swing state and the President is simply being realistic. That might be palatable, detriments to an honest and transparent political discourse aside, if there was actually something positive happening for Palestinians behind the scenes — but there isn’t.

Courtesy: KABOBfest