ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பூமியில் வெளிநாட்டு யூதர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தும் இஸ்ரேல்

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த புதன்கிழமை (27.01.2010) இஸ்ரேலின் ஸியோனிஸ

ஆபிரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்கு வரவழைக்கப்பட்டுள்ள யூதர்களில் ஒரு பகுதியினர்

அமைப்புக்களின் ஏற்பாடுகளுக்கமைய லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா முதலான நாடுகளிலிருந்து 240 யூதக் குடியேற்றவாசிகள் இஸ்ரேலுக்குப் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என ஹீப்ரு வானொலி தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்கா, எதியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த வருடம் இஸ்ரேலுக்கு வரவழைக்கப்பட்டுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான யூதக் குடியேற்றவாசிகளோடு, இப்புதிய யூதக் குடியேற்றவாசிகளும் இணைந்துள்ளனர் என அந்த வானொலிச் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி புதிய யூதக்குடியேற்றவாசிகள் இஸ்ரேலால் அமைத்துக் கொடுக்கப்படும் குடியிருப்புத் தொகுதிகளில் குடியமர்த்தப்படுவதற்கு முன்னர், தற்காலிக வதிவிடங்களான பல்வேறு கேந்திர நிலையங்களுக்கு அனுப்பப்படுவர் எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்

No comments yet.