ஆக்கிரமிப்பாளர்கள் பலஸ்தீனரின் வீட்டில் நுழைந்து அடாவடித்தனம் செய்ய இஸ்ரேலியக் கோர்ட் அனுமதி
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள்

"பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்"
கும்பலொன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரிலுள்ள 80 வயதுப் பெண்மணி ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் இரண்டாம் மாடியினுள் அத்துமீறி நுழைந்து அடாவடித்தனம் புரிந்துள்ளது. அவ்வீட்டினுள் தினந்தோறும் இவ்வாறு அத்துமீறி நுழைவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் அனுமதியளித்ததைத் தொடர்ந்தே இந்த அத்துமீறல் நீடிக்கின்றது.
கடந்த 25.01.2010 இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பில்(!?), வீட்டுச் சொந்தக்காரியான வயோதிகப் பலஸ்தீன் பெண்மணி தனது வீட்டின் இரண்டாம் மாடியில் ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் நுழைவதைத் தடுத்தால், 20,000 ஷெக்கல்கள் (5, 426 அமெரிக்க டொலர்கள்) அபராதப் பணமும், ஆக்கிரமிப்பாளர்களின் வழக்கறிஞருக்கு 9, 000 ஷெக்கல்கள் (2, 441 அமெரிக்க டொலர்கள்) பணமும் செலுத்தவேண்டி வருவதோடு, அப்பெண்மணி சிறையிலும் அடைக்கப்படுவார் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.
அவ்வீட்டினுள் காலை 8மணி முதல் இரவு 8மணி வரை ஆண் குடியேற்றவாசிகளையும், இரவு 8மணி முதல் காலை 8மணி வரை பெண் குடியேற்றவாசிகளையும் அத்துமீறி நுழைந்து தங்கியிருப்பதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கோர்ட் அனுமதியளித்துள்ளது.

"அராஜம் ஒன்றே நமது வழி"
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை (29.01.2010) இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மாநகரசபைக் குழு இஸ்ஸாவிய்யா நகரில் பலஸ்தீனர்கள் புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதைத் தடுத்துநிறுத்தும் நோக்கில் அங்குள்ள 660 தூனம் பரப்புள்ள பலஸ்தீன் நிலப்பரப்பைச் சுற்றிவளைத்து தேசியப் பூங்கா ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘யெரூஷலேம்’ எனும் இஸ்ரேலிய வாரப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் பலஸ்தீன் நகரத்தை விஸ்தரிப்பதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு வரலாற்றுப் பிரசித்திபெற்ற தளங்களை அமைக்கின்றோம் என்ற பெயரில் காய்நகர்த்துவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறுவழியில்லை என்றும் அப்பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.
நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்
