காஸாவின் சுற்றுச்சூழலை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் வெள்ளநீரைத் திசைதிருப்பியுள்ளது: கலாநிதி அஃக்ஹா
காஸா – கடந்த புதன்கிழமை (27.01.2010) காஸா பிரதேசத்தின்

காஸா வெள்ள அனர்த்தம் தொடர்பான கருத்தரங்கு
சுற்றுச் சூழலுக்குப் பேரழிவினை ஏற்படுத்தி, ஜொஹர் அல் தீக், அல் மஃரகா பள்ளத்தாக்குப் பகுதிகளின் பயிர்ச்செய்கைகளைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆக்கிரமிப்பு இஸ்ரேலினால் காஸாவை நோக்கி வெள்ளநீர் திசைதிருப்பி விடப்பட்டுள்ளது என பலஸ்தீன் விவசாய அமைச்சர் கலாநிதி ரமதான் அஃக்ஹா தெரிவித்துள்ளார்.
காஸா வெள்ள அனர்த்தம் தொடர்பாக பலஸ்தீன் விவசாய அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய கலாநிதி ரமதான் அஃக்ஹா, இஸ்ரேல் காஸா பள்ளத்தாக்கின் கிழக்குப் பிரதேசத்தினை ரசாயனக் கழிவுகளை எறிவதற்குப் பயன்படுத்தி வருவதாகவும், மழைக்காலத்தில் அணைக்கட்டு திறந்துவிடப்படும்போது அக்கழிவுகள் அனைத்தும் காஸா பள்ளத்தாக்கை நோக்கி அடித்துவரப்பட்டு, அப்பிரதேசமெங்கிலும் உள்ள நீரையும் நிலத்தையும் மாசுபடுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதுவரை இந்த வெள்ளப்பெருக்கினால் காஸா பள்ளத்தாக்குப் பிரதேசங்களில் விவசாயத்துறை சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் பத்து லட்சம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக அழிவுக்குள்ளான நிலப்பரப்பு, பயிரழிவு, மாசடைந்துள்ள மண் மற்றும் நிலக்கீழ் நீர் என்பனவற்றின் மொத்த சேத விபரங்களைத் திரட்டும் வகையில் தமது அமைச்சின் தொழினுட்பத்துறை மற்றும் நிர்வாகத்துறை ஊழியர்கள் அனைவரையுமே கள ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
வெள்ளப் பெருக்கினால் தத்தமது இருப்பிடங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்குரிய துரித நிவாரண உதவிகளைத் தமது அரசாங்கம் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்
