பலஸ்தீனரின் விளைநிலங்களை அழிக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்கள்- இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர்கைதுகள்
ரமல்லா – கடந்த திங்கட்கிழமை (25.01.2010) இரவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் ரமல்லா
பகுதியில் இருந்து பலஸ்தீனர்கள் ஏழுபேரைக் கடத்திச் சென்றுள்ளனர். அதே பிரதேசத்திற்கு வடமேற்கிலுள்ள தீர் நிஸாம் கிராமத்தில் பலஸ்தீனர்களுக்குச் சொந்தமான தோட்டத்துக்குள் அத்துமிறிப் பிரவேசித்த ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் 15 ஒலிவ் மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
ஹல்மிஷ் யூதக் குடியிருப்பைச் சேர்ந்த யூத ஆக்கிரமிப்பாளர்கள் குழுவொன்று ஜமால் அப்துல் காதிர் எனும் பலஸ்தீனருக்குச் சொந்தமான தோட்டத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்து அதனை நாசப்படுத்தியதோடு உலிவ் மரங்களையும் வெட்டிச் சாய்த்தனர் என்று உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த யூதக் குடியிருப்பாளர்கள் ஆயுதபாணிகளாக சுற்றுவட்டாரத்திலுள்ள பலஸ்தீன் கிராமங்களில் நுழைந்து அடிக்கடி இவ்வாறான காட்டுமிராண்டித் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிடுவதாகவும், பயிர் நிலங்களை நாசப்படுத்துவதாகவும் தெரிவித்த உள்ளூர்வாசிகள், பலஸ்தீன் கிராமவாசிகளின் மனங்களில் பீதியை ஏற்படுத்தி, அவர்களைத் தத்தமது நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு அவற்றைத் தாம் கைப்பற்றிக் கொள்வதே இந்த யூத ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் தொடர்கைதுகள்
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை அல் ஹலீல் நகரிலிருந்து ஐந்து பலஸ்தீனர்களையும், செவ்வாய்க்கிழமை மேற்குக் கரையிலிருந்து பலஸ்தீனர்கள் இருவரையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கைதுசெய்துள்ளனர். நாளுக்கு நாள் அப்பாவிப் பலஸ்தீனர்களைக் கைதுசெய்தும் கடத்திக்கொண்டும் போய் தமது சித்திரவதைக் கூடங்களை நிரப்பும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் அட்டூழியங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC

இஸ்ரேலியப் பொருட்களைப் பகிஷ்கரிப்போம்
