பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது

 அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும் மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன்  ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட   UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது.  

மேற்படி தீர்மானத்துக்கு உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமுகமாகப் பின்வரும் இணைப்பில் சொடுக்கி, உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை எழுதியனுப்புங்கள். உங்கள் உள்ளூர் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களிடமும் இதுகுறித்து கனேடிய அரசுக்குத் தமது அதிருப்தியை வெளிப்படுத்துமாறு கோரிக்கைவிடுங்கள்.

பலஸ்தீன் அகதிகளுக்கு உடனடியாக உங்கள் உதவி தேவைப்படுகின்றது. விரையுங்கள்!

No comments yet.